மோடி அடிக்கல் நாட்டுகிறார்

பெங்களூர், ஜூன் 8-
பெங்களூரில் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்
புறநகர் ரயில் திட்டத்திற்கு ஜூன் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். 2026ல் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பெங்களூர் புறநகர் பகுதியில் வசிப்பவர்கள் சுலபமாக நகருக்குள் பயணிக்கையில் புறநகர் ரயில் திட்டம் கொண்டு வர 1983 அப்போதைய முதல்வர் குண்டுராவ் ஆட்சிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு தென் மேற்கு ரயில்வேயில் நிபுணர்கள் ஆய்வு செய்தார்கள். இத்திட்டத்தை 58 கிலோ மீட்டருக்கு செயல்படுத்த ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டது.பல காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், கர்நாடக ரயில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனம், மற்றும் மத்திய ரயில்வே அமைச்சகம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
புதிய திட்டத்தில் புறநகர் ரயில் பாதை 148.17 கிலோமீட்டர்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் பெங்களூரு, மைசூர் சாலை கெக்கேரி, துமகூரு சாலை சிக்கபானவாரா, தொட்டபல்லாப்பூர் சாலை, ராஜனகுண்டே, கோலார்
சாலை, தேவனஹள்ளி, பங்கார்பேட்டை, ஒயிட்பீல்டு, ஹீலிலகே
என 6 காரிடார்கள் அமைய உள்ளது.

இந்த ஆறு காரிடாரில் 57 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான துவக்க விழா வரும் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் அடிக்கல் நாட்டுகிறார். 2026 திட்டத்தை முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.