
ஹைதராபாத், செப்.16 –
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அனைத்து முக்கியமான துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
கடந்த ஒன்பது வருடங்களாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் தொடக்க விழாவில் பேசிய அவர், கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மத்திய அரசின் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் முக்கியப் பங்காற்றி வருகிறது.
நாடு இன்று பல உள்நாட்டு சவால்களை எதிர்கொண்டுள்ளது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூரில் அதிகரித்து வரும் வன்முறை, சமத்துவமின்மை மற்றும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சீரழிவு நிலைமைகளை கட்டுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அனைத்து முக்கிய முனைகளிலும் தோல்வியடைந்துள்ளது என்று கூறினார். மணிப்பூரில் நடக்கும் சோக நிகழ்வுகள் நாடு முழுவதும் சாட்சியாக உள்ளது.”மோடி அரசு மணிப்பூரின் தீயை ஹரியானாவின் நுஹ்வை அடைய அனுமதித்தது. இந்த நிகழ்வுகள் நவீன, முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கின்றன, என்று மத்திய மோடி தலைமையிலான அரசு மீது ஸரமாறையாக புகார்களை கூறினார்.