மோடி கர்நாடகத்திற்கு வந்தால் காங்கிரசாருக்கு காய்ச்சல்

விஜயநகர், பிப். 28- விஜயநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு தொடங்கி வைத்து பேசியதாவது:- பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கர்நாடகத்திற்கு அடிக்கடி வருவது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். இரட்டை என்ஜின் அரசால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இது காங்கிரசாருக்கு பிடிக்கவில்லை. பிரதமர் மோடி வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க கர்நாடகத்திற்கு வருகை தருகிறார். பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்தால் காங்கிரசாருக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியின் சுனாமியில் காங்கிரஸ் அடித்து செல்லப்படுவது உறுதி. காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் மோதிக் கொள்கிறார்கள். அவர்களது மோதலால் காங்கிரஸ் 2 ஆக உடைந்து கிடக்கிறது. மத்திய உள்துறை மந்திரிஅமித்ஷா வந்து சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.