மும்பை, செப்.1-
எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டாமல், அவர்களின் கருத்துகளைக் கேட்காமல், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு திடீரென கூட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

எதிர்க்கட்சிகள் யாரையும் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் கூட்ட உள்ளனர். மணிப்பூர் தீயில் எரிந்து கொண்டிருந்த வேளையில், கோவிட் தொற்றுநோய்களின் போது சீனா பிரச்சினை அல்லது பணமதிப்பிழப்பு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்தாதது ஏன்
மும்பையில் நடந்த இந்திய கூட்டணி தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு அவர் பேசினார்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனையில் இருக்கும் போது, சிறப்பு அமர்வை அழைக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணரவில்லை என்றும் கார்கே கூறினார்.மத்திய அரசு திடீரென சிறப்பு கூட்டத்தை கூட்டி இருப்பதன் நோக்கம் என்ன என்பது புரியவில்லை என்றனர்.
இந்த மாதிரியான நடத்தை ஒரு நாட்டை நடத்துவதற்கான வழி அல்ல. நாம் மெல்ல மெல்ல சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறோம் என்பதையே இது காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.இந்திய கூட்டணிக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராட முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். எல்லோருக்கும் ஒரே இலக்கு. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பது குறித்த விரிவான தகவல்களை சேகரிக்க உள்ளதாக அவர் கூறினார்.