‘மோடி சமரசம் செய்தாலும் சுயேச்சையாக களமிறங்குவேன்’ – ஈஸ்வரப்பா

பெங்களூரு,மார்ச் 23
பாஜக சீட் தராததால் கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘’என் மகனுக்கு சீட் வழங்குவதாக எடியூரப்பா உறுதி அளித்திருந்தார். அவரது பேச்சை
நம்பி என் மகனை ஹாவேரியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன்.
இப்போது என் மகனுக்கு சீட் வழங்காமல் அவரது மகனுக்கு சீட் வழங்கியுள்ளார்.
ஷிமோகா தொகுதியில் அவரது மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்க போகிறேன். பிரதமர் நரேந்திர மோடி சமரசம் செய்தாலும் பின்வாங்கப் போவதில்லை’’ என்றார்.