மோடி சென்னை வருகை

சென்னை, மார்ச் 15 – சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 27-ந்தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார். இந்த திறப்பு விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.