மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம்

புதுடெல்லி, ஜூன் 8 பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11.10 மணிக்கு மத்திய
அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு முன் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடக்கிறது.