மோடி திறமையற்ற பிரதமர்

பெங்களூரு, மே 24-
நாட்டில் கொரோனா பரவலாக பரவுவதற்கு பலவீனமான மற்றும் திறமையற்ற பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.உக்ரப்பா தெரிவித்தார். கோவிட் தோன்றிய பின்னர் டெல்லியில் இருந்து அவர் மற்ற மாநிலங்களுக்கு செல்ல வில்லை. மக்களிடம் நம்பிக்கையை வளர்க்கவில்லை.
கொரோனா விவகாரம் பொறுத்தவரை, குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் பிரதமராக அவர் செயல்படுகிறார் ஆக்ஸிஜன், ரெமிடிசீவர் மற்றும் தடுப்பூசி வென்டிலேட்டர் போன்றவற்றை இந்த மாநிலங்களுக்குத் தேவையான அளவில் வழங்கி அவர் இந்தி பேசும் மாநிலங்களில் பிரதமராக திகழ்கிறார் என்று உக்ரப்பா கடுமையாக சாடியுள்ளார்