மோடி நாளை வருகை

பெங்களூரு, ஜன.18-

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை கர்நாடக மாநிலம் வருகை தருகிறார் இதனால் கர்நாடகா பிஜேபி உற்சாகம் அடைந்துள்ளது நாளை குல்பர்கா மற்றும் யாதகிரி பிஜேபி மாநாடுகளில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., காங்கிரஸ், ஜே.டி.எஸ்., கட்சிகள், மாநிலம் தழுவிய யாத்திரை நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., முக்கிய தலைவர்களும், மாநிலம் வருகை தருகின்றனர்.நாளை, பிரதமர் மோடி, குல்பர்கா யாத்ரிபிஜேபி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

ஒரு வாரத்தில் 2வது முறையாக பிரதமர் மோடி நாளை வருகை தருவது ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கலபுர்கி விமான நிலையத்தில் தரையிறங்குகிறார்.  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் யாத்கிரி மாவட்டம் ஹுன்சாகி தாலுகாவில் உள்ள கொடைக்கல்லுக்கு நேரடியாக வந்து சேரும் பிரதமர், நாராயண்பூர் இடதுகரை கால்வாய் நெட்வொர்க்கின் புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

ஜன்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் யாத்கிரி மற்றும் சூரத்-சென்னை எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் பல கிராம குடிநீர் விநியோக திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கலபுர்கி மாவட்டம் சேடம் தாலுகாவில் உள்ள மூலகெடாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவாய் கிராமங்களாக மாற்றப்பட உள்ளது இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில பிஜேபி தலைவர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பிஜேபி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்

ReplyForward