மோடி மீது ராகுல் சரமாரி குற்றச்சாட்டு

புதுடெல்லி,ஜூன். 15 – 1½ ஆண்டு காலத்தில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்க பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதை காங்கிரஸ் கட்சி சாடி இருக்கிறது.
இதையொட்டி அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் இந்தியில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ 8 ஆண்டுக்கு முன்னர் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று இளைஞர்களுக்கு வாக்குறுதி வழங்கி ஏமாற்றினார்கள். அதேபோன்றுதான் இப்போது 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்கிறார்கள். இது வெற்று வாக்குறுதி அல்ல. மாபெரும் வெற்று வாக்குறுதி. பிரதமர் வேலைகளை உருவாக்குவதில் நிபுணர் அல்ல. வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உருவாக்குவதில் நிபுணர்” என குறிப்பிட்டுள்ளார்.