மோடி வாரணாசியில் போட்டி -பிஜேபி 195 வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி,மார்ச்.2-
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பிஜேபி இன்று மாலை தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த வேட்பாளர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 34 மந்திரிகள் இரண்டு முன்னாள் முதல் மந்திரிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 195 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற பிஜேபி தீவிரமாக களம் இறங்கி உள்ளது. 370 தொகுதிகளை கைப்பற்றுவதே இலக்கு என்று அறிவித்து அதன்படி பிஜேபி வியூகம் வகுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடுகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிடுகிறார். பிஜேபியின் முதல் வேட்பாளர் பட்டியல்
28 பெண்கள், 50 வயதுக்குட்பட்ட 47 வேட்பாளர்கள் மற்றும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 57 பேர் 34 அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 195 பேரில், 51 பேர்bஉத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 20 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐந்து பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். டெல்லியில் பிரவீன் கண்டேல்வால், மனோஜ் திவாரி, சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மாநிலங்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத்தில் உள்ள போர்பந்தர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது