மோடி ஹாட்ரிக் வெற்றி – மீண்டும் பிஜேபி ஆட்சி என்று கருத்துக் கணிப்பு

புதுடெல்லி,ஜூன்.1-
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து வெளியான மொத்தம் 5 கருத்துக்கணிப்புகளில், பிஜேபி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற பாஜக தலைவர்கள் கூறுவது போல் எந்த ஒரு கருத்துக்கணிப்பும் பிஜேபி கூட்டணி கட்சிகள் 400 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கவில்லை ஆனால் அதே சமயம் பிஜேபி கூட்டணி பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் என்று தெளிவாகிறது.
தேர்தல் களத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்க முனைந்த இந்தியா, கூட்டணி கடும் பின்னடைவைச் சந்திக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது
மொத்தம் 5 கருத்துக்கணிப்புகளில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 365 இடங்களையும், இந்தியா கூட்டணி 142 இடங்களையும் பெறும் என்று கணித்துள்ளது.
நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 353 முதல் 368 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய கூட்டணி 118 முதல் 133 தொகுதிகளில் வெற்றி பெறும். மற்றவர்கள் 43-48 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார்கள்.
என்டிடி நடத்திய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 365 தொகுதிகளிலும், இந்தியாகூட்டணி 142 தொகுதிகளிலும், மற்றவர்கள் 36 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
மற்றொரு கருத்து கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி359 தொகுதிகளிலும், இந்தியா 154 தொகுதிகளிலும், மற்றவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணித்துள்ளது.
ஜன் கி பாத் தேர்தலிலும் 362-392 இந்தியா 141-161 மற்றும் மற்றவர்கள் 10-20 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 முதல் 378 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் நியூஸ் நேஷன் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறும் என்று கணித்துள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “எனக்கு கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. ஆனால், நான் முன்பே கூறியது போல். கர்நாடகாவில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. மாதிரிகளை சேகரித்து கருத்து கணிப்புகள் என்று கூறுவதால் இவற்றில் நம்பிக்கை இல்லை,” என்றார்