மோட்டார் சைக்கிள் மீதுஜீப் மோதல் – இரண்டு பேர் பலி

மைசூர் : நவம்பர். 10 – வேகமாக வந்த ஜீப் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு பேர் அதே இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ஹுணசூரு தாலூகாவின் கோதேகிலாலா கேட் அருகில் நடந்துள்ளது. அத்திகுப்பே கிராமத்தை சேர்ந்த நாகராஜு (48) , மற்றும் ஷிவராஜு (45) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள். இவர்கள் இருவருமே கூலி தொழிலார்களாய் இருந்து வந்ததுடன் இவர்கள் ஹுணசூரு மார்கமாக தங்கள் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தபோது மடிகேரி பகுதியிலிருந்து வந்த ஜீப் இவர்கள் வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்து குறித்து ஹுணசூர் கிராமாந்தர போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பொருளாதார சிக்கலில் ஈடுபட்டுவந்த குடும்பத்தின் இரண்டு உறுப்பினர்கள் இப்படி சாலை விபத்தில் இறந்துள்ளது குடும்பத்தாரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சாலையில் அனைத்து வாகனங்களும் எவ்வித வேக கட்டுப்பாடுமின்றி அதிவேகத்தில் சென்று வருவதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் வேக கட்டுபாட்டினை விதிக்க வேண்டும் என கிராமத்தார் வற்புறுத்தியுள்ளனர் . இதே போல் கரும்பு நிரம்பிய ட்ராக்டர் ஒன்று பாதை தவறி வீதி நடுவில் கவிழ்ந்து விழுந்ததில் பல இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ள சம்பவம் பாக்லகோட்டேயின் முதோளா வீதியில் ரவுண்டானா அருகில் நடந்துள்ளது. பொதுவாகவே அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் இந்த பகுதியில் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நடந்த போது அதிக மக்கள் அல்லது வாகன போக்குவரத்து இருக்கவில்லை. ட்ராக்டர் கவிழ்ந்து விழுந்ததால் சில மணி நேரம் வாகன போக்குவரத்து தடைபட்டது. நகரில் பை பாஸ் சாலை இருப்பினும் கரும்பு நிரப்பிய ட்ராக்டர்கள் நகரின் உட்பகுதியிலேயே சென்று வருவது பல பிரச்சனைகளுக்கு காரணமாகியுள்ளது . முதோலா நகரில் ஏற்படும் வாகன பிரச்சனைகளால் மாற்று வழி பாதையாக அமைக்கப்பட்டுள்ள பை பாஸ் வீதியை யாரும் பயன்படுத்தி வருவதாக தெரியவில்லை.