மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: தம்பதி சாவு

மைசூரு, மார்ச்.2: பைக் மற்றும் கேன்டர் இடையே ஏற்பட்ட மோதலில் தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம்
ஹுன்சூரில் நடைபெற்றுள்ள‌து.
மைசூரு மாவட்டம் ஹுன்சூர் மஞ்சுநாத் லேஅவுட்டைச் சேர்ந்தவர் ராஜா (64) மற்றும் அவரது மனைவி சுனந்தா (55) உயிரிழந்தவர்கள்.
ராஜா தனது மனைவியை பைக்கில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது ஹுன்சூர் கனக பவன் அருகே வேகமாக வந்த கேன்டர் சரக்கு வாகனம் பைக்கின் மீது
மோதியுள்ளது.
மோதியதில் தம்பதியினர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தை அடுத்து வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டுநர் தப்பியோடினார். அவரை பொதுமக்கள் துரத்திச் சென்று வாகனத்தை நிறுத்தி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஹுன்சூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.