யஷஸ்வினி புதிய உறுப்பினர் சேர்ப்பு காலக்கெடு நீட்டிப்பு

பெங்களூரு, ஜன.2- யஷஸ்வினி ஆரோக்ய பிரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதி கடைசி தேதியை மேலும் ஒரு மாதம் நீட்டித்து கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
யசஸ்வினி யோஜனா திட்டத்தில் புதிய உறுப்பினர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய முடியாத பின்னணியில், கூட்டுறவு சங்கங்கள், எம்எல்ஏக்கள், விதான் பரிஷத் உறுப்பினர்கள் ஆகியோரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் யஷஸ்வினி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத அனைவரும் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
30 லட்சம் புதிய உறுப்பினர்களின் இலக்கு:
கூட்டுறவுத் துறையின் கூற்றுப்படி, மாநிலத்தில் யஷஸ்வினியாஷஸ்வினி ஆரோக்ய பிரக்ஷா யோஜனாவின் கீழ் இந்த ஆண்டு 30 லட்சம் புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது