யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் கார் நிறுத்தும் இடத்திற்கான‌ பணிகள் வேகம்

பெங்களூரு, செப். 20: யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் கார் நிறுத்தும் இடத்திற்கான‌ பணிகள் வேகம் பிடித்துள்ளன.
தற்போது கிழக்குப் பகுதியில் (பிளாட்பார்ம் எண் 1) வாகனங்கள் வந்து செல்லும் மற்றும் புறப்படும் இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயில் நிலையத்தில் விமான நிலைய காத்திருப்பு ஓய்வறைகளுக்கு இணையான ஒரு பெரிய பகுதியாக‌ (14,800 சதுர மீட்டர்) இருக்கும்.
யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் மார்க்கெட் பக்கத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் மற்றும் மேம்பால சாலைக்கான சாய்வுதளம் அமைக்கும் பணி வேகம் பிடித்துள்ளது. தினசரி 1 லட்சம் பயணிகள் வந்து செல்லும் யஷ்வந்த்பூர், கர்நாடகாவின் இரண்டாவது பெரிய‌ ரயில் நிலையமாகும். ரூ. 380 கோடி செலவில் மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. இப்பணி நிகழாண்டு பிப்ரவரியில் தொட‌ங்கி உள்ளது. இந்த பணி 2025 ஆம் ஆண்டு ஜூலையில் முடிவடையும்.
மல்டி லெவல் கார் பார்க்கிங் 6,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். கிழக்குப் பகுதியில் 90 இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படும். மேற்கு (மெட்ரோ) பக்கத்தில், இது 35 கார்கள் அல்லது சுமார் 70 இரு சக்கர வாகனங்களுக்கு இடமளிக்கும். மேலும், 40 ஆட்டோக்கள், கார்கள் மற்றும் 50 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் இருக்கும்.