யாக பூஜை

திண்டுக்கல் ஜனவரி. 24 –
நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி கோவில்மேடு பகுதியில் உள்ள உக்ர பிரத்யங்கிரா கோவிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. இதனை சிலுக்குவார்பட்டி ஊர் பெரியதனக்காரர்கள், பொதுமக்கள் இணைந்து நடத்தினர். அதில் யாக வேள்வியில் மிளகாய் வத்தலை கொட்டி பூஜைகள் செய்யப்பட்டது. இந்த பூஜையில் நிலக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, தேவதானப்பட்டி, கே.குரும்பபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை முடிவில் அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.