யானைகள் கூட்டமாக நடமாட்டம்

பெங்களூர், டிச.11-
ஆனேக்கல், மற்றும் தமிழகத்தின் ஓசூர் சாணமனு, வனப்பகுதியில் இரண்டு நாட்களாக யானை கூட்டம் முகாம்மிட்டுள்ளது. 80 கும் மேற்பட்ட யானைகள் நடமாடுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பிர்ஜெ பெல்லி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைகள், தினை, நெல் தோட்ட பயிர்களை மிதித்து நாசப்படுத்தி உள்ளது.
தமிழகத்திலிருந்து ஆனேக்கல் பகுதிக்கு வரும் 25 யானைகள் கூட்டம் எல்லையில் தடுத்து நிறுத்த முத்திய மடு, அருகே யானைகள் வழித்தடத்தில் பட்டாசு வெடித்தும், தீ வைத்தும் பணப்பகுதியை நோக்கி பின்வாங்க வைக்க வனத்துறையினர் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.கவுரவமனே ஏரி, சேஷாதிபுரம் ஏரிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனேக்கல் பகுதி வனப்பகுதியில், 25 யானைகள் கொண்ட கூட்டம் மற்றும் ஒரு கூட்டம் ,ஒரு ஒற்றை யானையை கண்டுபிடித்தது.
கிராமங்களில் அவைகள் நுழைய விடாமல் தடுக்க, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆடு, மாடு மேய்க்க வனப்பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது. மற்றும் யானைகள் உள்ள இடத்தில் செல்பி எடுப்பதற்கு தமிழக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அறுவடை காலத்தில் யானைகள் கிராமங் களில் நுழைவது வழக்கம்.
தமிழக யானைகள் ஆண்டுதோறும் ஜவளக்கெரே, தேவரப் பெட்டா, வனப்பகுதியில் இருந்த முத்யால மடுவு மெனசிகன ஹள்ளி வனகன ஹள்ளி, சுனவாரா கிராமங்களுக்கு வருவது வழக்கம் என தெரிய வந்துள்ளது.