யானைத் தந்தங்கள் விற்க முயன்ற கும்பல் கைது

சிக்கபல்லாப்பூர், ஜூன் 9-
2 பெரிய யானைகளின் தந்தங்களை விற்பனை செய்ய முயற்சித்த ஐந்து பேரை வன போக்குவரத்து பிரிவு
போலீசார் கைது செய்தனர்.
தருகிறேன் சேர்ந்த சிவக்குமார் சுந்தரேஷ் மகந்தேஷ் சிவமொகாவின் பத்ராவதியை சேர்ந்த நூரஹமத் சித்ரதுர்கா தாலுகாவின் ஆஞ்சனப்பா ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.இவர்கள் வசம் கடந்த 6 மாதமாக யானைத் தந்தத்தை வைத்துக்கொண்டே விற்பனை செய்ய முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இந்த யானை தந்தத்தை விற்க முயற்சித்தபோது ஓம்னி காரில் வைத்துக்கொண்டு சுற்றி திரிந்து உள்ளனர்.
ரகசிய தகவல் அறிந்த போலீசார் இந்த ஐந்து பேரையும் கைது செய்து யானை தந்தத்தை பறிமுதல் செய்துள்ளனர்.இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது அப்போது அவர்கள் கூறுகையில் தரக்கெரி தாலுகாவை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சுந்தரேஷ் ஆகியோர் வனப்பகுதியில் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர் புலி நடமாட்டம் உள்ள ஒதுக்கப்பட்ட இடத்தில் மக்கள் நடமாட அனுமதி இல்லை ஆயினும் காபி எஸ்டேட்டில் வேலை செய்த சிவக்குமார் மற்றும் சுந்தரேஷ் வனப்பகுதியின் பள்ளத்தில் மீனைப் பிடிக்க சென்றுள்ளனர் அங்கு காட்டில் யானை ஒன்று இறந்து கிடந்தது அந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்து வீட்டில் வைத்திருந்தனர் ஆறு மாதங்களுக்கு பிறகு இந்த தந்தத்தை விற்பனை செய்ய முயற்சித்தபோது இவர்களுக்கு துணையாக மூன்று பேரை சேர்த்துக்கொண்டனர் என்று விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர்.