யானைத் தாக்கி வன காவலர் பலி

ஹாசன், ஆகஸ்ட் 31-
காட்டு யானை பீமா தாக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வன காவலர் வெங்கடேஷ் உயிரிழந்தார்.

காட்டு யானை பீமா உடல் காயம் ஏற்பட்டு ஆவேசமுடன் சுற்றி வந்தது. காட்டில் அதை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்தது இதன்படி வனத்துறை காவலர்கள் குழு
ஆலூர் தாலுக்கா ஹள்ளியூர் கிராமத்தில் யானையைத் தேடிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த யானை வனத்துறை காவலர் வெங்கடேஷ் மீது கடுமையாக தாக்கியது இதில் அவர் படுகாயம் அடைந்தார் மற்ற வன காவலர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் காயமடைந்த வெங்கடேஷ் அவர்கள் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. பலியான வன காவலர் வெங்கடேஷ் துப்பாக்கி சுடுதலில் நிபுணர் ஆவார் கர்நாடக மாநிலத்தில் எந்த ஒரு இடத்தில் யானையைப் பிடிக்க வேண்டும் என்றாலும் இவரை அனுப்பி வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.