யானையைப் பார்த்து டிரைவர் பீதி பள்ளத்தில் விழுந்த ஜீப்

சிக்கமகளூரு, மே 13: சர்மாடி காட்டின் சாலையில் நேற்று இரவு திடீரென யானை இருந்ததைக் கண்டு பீதியடைந்த டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகில் இருந்த‌ வாய்க்காலில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
சார்முடி காட்டியில், யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு இரவும் 8, 9, 10 ஆகிய திருப்பங்களில் யானைகள் இருப்பதை காணமுடிகிறது. நேற்று இரவு 9வது திருப்பத்தில் திடீரென சாலையில் யானை நின்றுள்ளது. இதை பார்த்து பீதியடைந்த டிரைவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் வாகனம் சாலையோரம் இருந்த வாய்க்காலில் விழுந்தது.
பனிமூட்டமான காலநிலையில் பொதுவாக சாலைகள் தெரிவதில்லை. இதனால் வாகனகளை ஜாக்கிரதையாக ஓட்டினாலும், விபத்துகள் ஏற்படுகின்றன‌. இதுபோன்ற நேரத்தில் திடீரென யானைகள் தோன்றுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்ற‌னர். கடந்த ஒரு வாரமாக சார்முடி காட்டில் உள்ள சாலையில் யானை ஒன்று நடமாடி வருகிறது. பகலில் கூட யானைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.
சார்முடி காட்டின் கீழே உள்ள தர்மஸ்தலா போன்ற புனித யாத்திரை தலங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வருகின்றன. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது. பெரிய வாகனங்களில் வருபவர்கள் யானையைக் கண்டவுடன் வேகத்தை குறைத்து நிறுத்துகின்றனர். ஆனால் சிறிய வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். யானைகள் சாலையில் நடமாடுவ‌தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்வதில்லை. லாரிகள், யானை மீது மோதுவதற்குள் அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

யானை தாக்கியதில் ஒருவர் பலி:
ஷிமோகாவில் வன விலங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், நீங்கள் உயிருடன் வருவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதற்கு சாட்சியாக வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். எனவே மற்றொரு உயிர்பலிக்கு முன்னரே வந்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.