யானை தாக்கி ஒருவர் பலி

மூணாறு: பிப் .27: கேரள மாநிலம் மூணாறில் காட்டு யானை தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். கடந்த சில நாட்களாகவே மூணாறு பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் வாகனங்களை வழிமறித்து தடுத்து நிறுத்துவதும் அதேபோல தாக்குதல் நடத்துவதும் நடந்து வருகிறது. இந்நிலையியல் நேற்று இரவு மூணாறில் கன்னிமலை என்ற இடத்தில் மணி என்ற ஆட்டோ ஓட்டுனர் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவை தும்பிக்கையால் தாக்கி கவிழ்த்துள்ளது.
யானை தும்பிக்கையால் ஆட்டோவை கவிழ்த்துவிட்டத்தில் அடியில் சிக்கிய ஓட்டுனர் மணி உயிரிழந்தார். ஆட்டோவுக்குள் இருந்த பயணிகள் 2 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். அவ்வழியே ஜீப்பில் வந்தவர்கள், யானையை விரட்டி காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். காட்டு யானை தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததால் மூணாறு பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.