யானை தாக்கி பெண்மனிசாவு

ஓசூர் : ஜனவரி. 18 – கர்நாடக மாநில எல்லை பகுதியான ஓசூர் அருகில் ஹனுமந்தபுரத்தில் காட்டு யானை தாக்கியதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் முனிரத்னா (27) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் கெலமங்களா கிராமத்திற்கு தன்னை விடுமாறு கிராமத்தை சேர்ந்த இளைஞன்
ஒருவனிடம் கேட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது காட்டு யானை குறுக்கே வந்துள்ளது.
யானை தாக்க துவங்கிய உடன் மோட்டார் சைக்கிளை விட்டு கிராமத்தான் பதறி ஓடி உள்ளான்.
ஆனால் பின்னால் உட்கார்ந்திருந்த முனிரத்னா ஓடமுடியாமல் யானை தாக்குதலுக்கு ஆளாகி அதே இடத்தில் இறந்துள்ளார்.
பின்னர் அங்கு சேர்ந்த இவருடைய குடும்பத்தார் வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.