யானை மீது அமர்ந்து சவாரி செய்த பிரதமர் மோடி

குஹாட்டி, மார்ச் 9: பிரதமர் நரேந்திர மோடியின் அசாம் பயணத்தின் போது யானை மற்றும் ஜீப்பில் அமர்ந்து காசிரங்கா தேசிய பூங்காவை சுற்றிப்பார்த்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக அசாம் மாநிலத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சென்று யானை மற்றும் ஜீப்பில் அமர்ந்து பூங்காவைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் முகலாயர்களுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடிய அசாமின் அஹோம் ராஜ்ஜியத்தின் ராயல் ஆர்மியின் புகழ்பெற்ற ஜெனரல் லச்சித் போர்புகனைக் கௌரவிக்கும் வகையில் 84 அடி உயரமுள்ள சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜோர்ஹாட்டில், சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில் மற்றும் வீட்டு வசதித் துறைகளை மேம்படுத்துவதற்கான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்துஅருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இட்டாநகரில் நடைபெறும் ஒரு நிகழ்வின் போது அவர் பல வளர்ச்சி முயற்சிகளை அறிமுகப்படுத்துகிறார். அருணாச்சல பிரதேசத்தில் ரூ. 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.
மேற்கு வங்கம் சிலிகுரியில் நடைபெறும் “விக்சித் பாரத் விக்சித் மேற்கு வங்கம்” நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இந்நிகழ்ச்சியின் போது, ரூ.4,500 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே மற்றும் சாலைத் துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கிவைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.