ரயிலில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

மங்களூர் : பிப்ரவரி. 15 – இளம் பெண் ஒருவர் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து நேத்ராவதி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் பண்ட்யால் அருகில் நடந்துள்ளது. தும்கூர் மாவட்டத்தின் மதுகிரி தாலூகாவின் மிடிகேசி ஊராட்சி ஒன்றியம் பகுதியில் வசித்து வந்த நயனா எம் (27) என்பவர் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்ணனாவார். இன்னும் திருமணமாகலாத நயனா மங்களூரிலிருந்து பெங்களூருக்கு சென்றுகொண்டிருந்த ரயிலில் காலை பயணித்துக்கொண்டிருக்கும்போது பி சி ரோடு ரயில் நிலையத்தில் நேத்ராவதி பாலம் அருகில் வரும் போது நயனா கதவருகில் வந்து திடீரென நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்த உடனேயே உள்ளூர் வாசிகள் கூட்டம் சேர்ந்தவர் போலீசார் பொது மக்கள் உதவியுடன் உடலை நதியிலிருந்து மேலே எடுத்துள்ளனர் .நீச்சல் வீரர் முஹம்மது குழுவினர் நயனாவின் உடலை மேலே எடுத்துள்ளனர். பன்டயால் போலீஸ் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நயனா ரயிலில் தனியாக பயணித்தாரா , உடன் யாரவது இருந்தார்களா அவர் எங்கு ரயில் எர்னினார் மற்றும் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்