ரயிலில் தீ – 10 பக்தர்கள் பலி

மதுரை: ஆகஸ்ட். 26 -மதுரையில் இன்று (சனிக்கிழமை)அதிகாலை நின்றிருந்த சுற்றுலாரயிலில் தீப்பற்றியதில் 9
பேர் உயிரிழந்தனர். 6 பேர்காயமடைந்தனர்.இந்த விபத்து தொடர்பாகதெற்கு ரயில்வேவெளியிட்டுள்ளஅறிக்கையில் இத்தகவல்கள்
இடம் பெற்றுள்ளன.மேலும் ரயிலில் பயணிகள்சட்டவிரோதமாக சமையல்எரிவாயு சிலிண்டரைகொண்டுசென்றதே விபத்துக்குக் காரணம்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்கள்அனைவரும் உத்தரப் பிரதேசமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் 3 பேர் பெண்கள், 4பேர் ஆண்கள் மற்றும் ஒருவரின்அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளத நடந்தது என்ன? கடந்தஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில்இருந்து ஆன்மிகப் பயணமாக60-க்கும் பட்டோர்அடங்கிய குழுவினர்தமிழகம் வந்தனர். இவர்கள்ராமேஸ்வரம் உள்ளிட்டபல்வேறு புனிதத்தலங்களுக்கும்சென்றுள்ளனர். கடைசியாகநேற்று நாகர்கோவிலில் உள்ளபத்மநாபசுவாமி கோயிலில்தரிசனம் செய்துவிட்டு இன்றுஅதிகாலை 3.45 மணியளவில்
மதுரை வந்துள்ளனர்.புணலூரில் இருந்துவந்தரயில் மூலம் அவர்கள் மதுரைவந்தனர். அவர்கள் வந்தஇரண்டு ரயில் பெட்டிகள்தனியாகப் பிரிக்கப்பட்ட மதுரைரயில்வே சந்திப்பில் இருந்து1 கிலோ மீட்டர் தூரத்தில்நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
கனெக்டிங் ரயில் மூலமாக நாளைசென்னை செல்லவிருந்தனர்.இந்நிலையில் இன்றுஅதிகாலை 5.15 மணியளவில்ரயிலில் தீப்பிடித்துள்ளது.ரயிலில் இருந்த பயணிகள்சிலிண்டர் பயன்படுத்திசமைத்துள்ளனர். அப்போதுசிலிண்டர் வெடித்து தீபிடித்துள்ளது. தீ மளமளவெனப்பரவ ரயில் பயணிகள்அலறியடித்துக் கொண்டுவெளியேறியுள்ளனர். 55பேர் உயிர் தப்பியுள்ளனர்.மையல் செய்வதற்காகரயில் பெட்டியின் ஒருபுறம்உள்ள கதவில் உள்புறம்தாழிடப்பட்டிருந்த நிலையில்பயணிகள் அனைவரும் ஒரேபக்கத்தில் வெளியேறுவதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.6 பேர் காயங்களுடன்அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீயணைப்பு வீரர்கள் சுமார் 2மணி நேரப் போராட்டத்துக்குப்பின்னர் தீ முழுவதுமாகஅணைக்கப்பட்டது.அமைச்சர், அதிகாரிகள்ஆய்வு: விபத்து நடந்த பகுதியில்தமிழக அமைச்சர் மூர்த்திநேரில் சென்று ஆய்வு செய்தார்.மாவட்ட ஆட்சியர் சங்கீதா,காவல் உயரதிகாரிகள், தெற்குரயில்வே உயர் அதிகாரிகள்விரைந்து சென்றனர். விபத்துப்பகுதியை நேரில் ஆய்வு செய்தஅமைச்சர் மூர்த்தி பின்னர்செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது “நிகழ்விடத்தில்
அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டுள்ளனர். சிலிண்டர்வெடித்ததே விபத்துக்குக்காரணம் எனத் தெரிகிறது.9 பேர் பலியாகியுள்ளனர். 6பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய
முதல்வர் உத்தரவிட்டுள்ளார்”என்றார்.