ரயில்வே போலீசாரை தாக்கிய 6 பேர் கைது

பெங்களூர், பிப்.29-
மைசூர் – பெங்களூர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த கோல் கும்பாஸ் ரயிலில் ரயில்வே போலீஸ்காரரை தாக்கி, கத்தியால் குத்திய வழக்கில், ஆறு பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கோல் கும்பாஸ் ரயிலில் பணியில் இருந்த மைசூர் ரயில்வே போலீஸ் சதீஷ் சந்திராவை, குற்றவாளிகள் கத்தியால் குத்தி உள்ளனர்.
இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
ரயில்களில் திருட்டு வழக்கு கண்டறிந்து தடுக்கும் பணியில் சதிஷ் சந்திராவுக்கு பணி ஒதுக்கப் பட்டிருந்தது.
ரயிலில் ‘எஸ்’ பெட்டியின் கழிவறை அருகே ஆறு பேர் கொண்ட கும்பல் இருந்தது.
இதில் இரண்டு பேர் சிகரெட் புகைத்து கொண்டு இருந்தனர்.
அவர்களுக்கு ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் அறிவுரை கூறியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்த அந்த நபர்கள் போலீஸ்காரரை தாக்கியுள்ளனர்.
மத்தூர் ரயில் நிலையம் வந்ததும் உள்ளூர் வாசிகள் உதவியுடன் போலீசாரை தாக்கிய இருவரை கைது செய்தனர். மற்ற ஆறு பேர் தலைமறை வாங்கினர்.
இந்த வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில்
ஜே.ஜே. நகரை சேர்ந்த முகமது இர்ஃபான் (19) தர்ஷன் (21) இம்ரான் (20) மோஹித் பாஷா (21) மைசூர் ரோடு கஸ்தூரிபா நகரை சேர்ந்த முனிராஜ் என்ற சின்னி (24) பைசல்கான் (22) ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.