ரவா இட்லி


தினசரி வீட்டில் இருப்பவர்களுக்கு சிற்றுண்டி செய்ய வேண்டும் . ஒவ்வொரு நாள் தோசை ,இட்லி , எலுமிச்சை சாதம் , புளியோதரை , புலாவ் ,கிச்சிடி , என செய்தததையே செய்து வருகிறோம் . வேறு ஏதாகிலும் வித்யாசமாக செய்ய வேண்டும் என யோசித்தால் அந்த வகையில் உங்களுக்காக சுடசுட ரவை இட்லி செய்யும் முறை இதோ உங்களுக்காக .
தேவையான பொருட்கள் :
ரவை – ஒரு கப்
தயிர் -முக்கால் கப்
தண்ணீர் -முக்கால் கப்
முந்திரி -பத்து
சோடா -கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் -ஐந்து
கறிவேப்பிலை -சிறிது
கொத்துமல்லி
கேரட் -பொடி -சிறிது
உப்பு -ருசிக்கேற்ப
கடலை பருப்பு -இரண்டு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -ஒரு ஸ்பூன்
சீரகம் -1/4 ஸ்பூன்
கடுகு -1/4 ஸ்பூன்
எண்ணெய் -4 ஸ்பூன் (அல்லது நெய் )
செய்முறை:முதலில் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும் . அதில் முந்தரியை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும் . அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ரவையை அதன் பச்சை வாசனை போகும் வரை வறுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளவும் . (சிறு தீயில்) கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெ ய் ஊற்றவும் . அதில் கடுகு ,சீரகம் ,உளுத்தம்பருப்பு மற்றும் கடலை பருப்புஆகியவற்றை போட்டு வறுக்கவும் . சிறிதாக வெட்டிய கொத்துமல்லி ,கறிவேப்பிலை ,பச்சைமிளகாய் மற்றும் பொடி கேரட் போட்டு வறுக்கவும் . இப்போது வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கலக்கவும் . அதை ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ளவும் . வறுத்த ரவையுடன் தயிர் ,சோடா மற்றும் உப்பு போட்டு கலக்கவும். பின்னர் சற்று தண்ணீர் சேர்த்து கலக்கவும் . இதை 15 நிமிடங்கள் அப்படியே விடவும் . பின்னர் தண்ணீர் குறைந்தால் மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும் . (இது இட்லி மாவை போல் இருக்க வேண்டும் ). இப்போது இட்லி பாத்திரத்தில் சற்று எண்ணெய் தடவி ஒரு முந்திரியை குழி நடுவில் வைக்கவும் . அதன் மீது இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும் . 15 நிமிடம் வேகவைத்து பின்னர் ஆவி வெளியேறிய பின் திறக்கவும் . இப்போது சட்னி பாம்பே சாகுவுடன் சுடசுட இட்லி தின்பதற்கு ரெடி