ரவுடி உள்பட 3 பேர் கைது

பெங்களூர்: ஜூன். 11 – போதை பொருள்கள் விவகாரத்தில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் குற்றவாளிகளை சி சி பி போலீசார் கைது செய்து இவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய்கள் மதிப்புள்ள போதை பொருள்களை கைப்பற்றியுள்ளனர். வித்யாரண்யபுரா பகுதியில் போதை பொருள்களை விற்பனை செய்து வந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 11 கிராம் எம் டி எம் ஏ மாத்திரைகள் , 6 கிலோ கஞ்சா , மாருதி கார் , இரண்டு மொபைல்கள் மின் எந்திர எடை கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக இணை போலீஸ் ஆணையர் ரமன் குப்தா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட குற்றாளிகளில் ஒருவன் வித்யாரண்யபுரா போலீஸ் நிலையத்தில் ரௌடி பட்டியலில் இருப்பதுடன் அவன் மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து குறைந்த நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் கேரளாவிலிருந்து குறைந்த விலைக்கு போதை பொருள்களை வாங்கி ஒரு கிராம் எம் டி எம் ஏவை 8 முதல் 10ஆயிரத்திற்கும் 10 கிராம் கஞ்சாவை ஒன்று முதல் இரண்டாயிரத்திற்கும் கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளான் . இவர்கள் குறித்து வித்யாரண்யபுரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கூடுதல் விசாரணை நடந்து வருவதாக இணை போலீஸ் ஆணையர் ரமன் குப்தா தெரிவித்தார்.