ரவுடி கொலையில் 4 பேர் கைது

பெங்களூரு, செப். 15- அசோக் நகரின் கால்பந்தாட்ட மைதானம் அருகில் பட்ட பகலில் பிரபல ரௌடி அரவிந்தை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்த நான்கு குற்றவாளிகளை கைது செய்வதில் மத்திய பிரிவு போலீசார் வெற்றியடைந்துள்ளனர். ஸ்டாலின் , விஜய் , அருண் , மற்றும் ஜாக் ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள். இதில் தலைமறைவாயுள்ள மேலும் ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மேற்கு பகுதியின் ரௌடியாயிருத்ததுடன் அடிக்கடி தங்கள் மீது அரவிந்த் மோதலில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்து கொலை செய்யப்பட்டான் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் பல முறை ஸ்டாலின் ,விஜய் உட்பட பலரின் மீது தாக்குதல் நடத்திய அரவிந்த் மீது பாரதிநகர் , புலிகேசி நகர் , ஆகிய போலீஸ் நிலையங்களில் புகாரும் உள்ளது. இந்த வழக்குகளில் போலீசார் அரவிந்தை கைது செய்து சிறைக்கு அனுப்பியிருப்பினும் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளான் . இதனால் அரவிந்த் சிறையிலிருந்து வந்ததிலிருந்து கொலைக்கு திட்டம் தீட்டப்பட்டது . அரவிந்தை இப்படியே விட்டால் அவன் நம்மை விட மாட்டான் என்றே கொலை செய்ததாக குற்றவாளிகள் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். என டி சி பி எம் ஏன் அனுசேத் தெரிவித்தார்.