ரவுடி வெட்டிக் கொலை

மண்டியா, ஏப். 10: யுகாதி பண்டிகையையொட்டி, பிரபல ரவுடி அக்‌ஷய் நேற்று இரவு ஸ்வர்ணசந்திராவில் நடுசாலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பிரபல ரவுடி அக்‌ஷய் (24) பழைய முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த அக்ஷய்யை போனில் அழைத்து நடுசாலையில் வெட்டிக் கொன்றனர். பல குற்ற வழக்குகளின் பின்னணியில் அக்‌ஷய் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த காலங்களில் இவருடன் இருந்த நண்பர்கள் பலர் தற்போது எதிரிகளாக உள்ளதால் முன்விரோதம் பின்னணியில் கொலை செய்திருக்கலாம்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.