ரவை உருண்டை


ரவை உருண்டை என்பது அனைத்து பண்டிகைகளில் செய்யப்படும் சுவையான இனிப்பு. இதை செய்வதும் மிகவும் சுலபம். ரவை உருண்டையை செய்துவைத்தால் ஒரு வாரம் வரை கூட கெடாமல் இருக்கும்.
செய்யும் முறை: ஒரு பாவு சர்க்கரையில் நான்கு ஏலக்காய்களை தோல் நீக்கி பொடி செய்யவும். அரை தேங்காயை துருவிக்கொள்ளவும். ஒரு பாவு சிரோட்டி ரவை மற்றும் நான்கு ஸ்பூன் நெய் ஊற்றி கம கம வென்று வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் ஒரு வாணலியில் சற்று நெய் ஊற்றி துண்டுகளாக்கிய முந்திரி மற்றும் திராட்சியை வறுத்து நன்றாக கலந்து ரவை சற்று சூடாயிருக்கும்போதே நீர் மற்றும் பால் சேர்த்து கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக செய்துவிட்டால் உங்களை விட ஒரு நல்ல ரவை உருண்டையை இனி யாரும் செய்ய முடியாது என நீங்களே பெருமை பட்டு கொள்ளலாம்.