ரஷ்யாவிற்கு ஐநா சபை வலியுறுத்தல்

உக்ரைனுக்கான நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவி வழங்குவது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்று ரஷியாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் நேட்டோ அமைப்பிற்கும், ரஷியாவிற்கும் இடையேயான மறைமுகமாக போர், தற்போது வெளிப்படையாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக புதினின் நெருங்கிய கூட்டாளியான டிமிட்ரி மெட்வெடேவ், குறிப்பிட்டுள்ளார்.ரஷிய அதிபர் புதினுடன் பேச தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டு தொலைக்காட்சிக்கு ஒன்று பேட்டி அளித்த அவர், ரஷிய ராணுவம் எங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார். நாங்கள் ரஷியா மீது படையெடுக்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார். உக்ரைன் பள்ளிகள் மீது குண்டுகள் வீசிவது நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. ராணுவ நோக்கங்களுக்காக பள்ளிகளை பயன்படுத்துவது கண்டித்தது என்றும், உக்ரைனில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் கனரக பீரங்கி மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறுவதாகவும்ஐ.நா குழந்தைகள் நிதிய துணை நிர்வாக இயக்குனர் உமர் அப்டி குற்றம் சாட்டி உள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா, உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது.