ரஷ்யா, சீனா இடையிலான உறவு வலுவடைகிறது

பெய்ஜிங்: செப்டம்பர். 14 – உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.
இதுகுறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செயல்படும் சீன திட்டம் அமைப்பின் இயக்குநர் யூன் சன் கூறும்போது, “அமெரிக்கா, சீனா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா உடனான பொருளாதார உறவை துண்டித்துள்ளன. உக்ரைன் போரின் எதிர்விளைவாக ரஷ்யா, சீனா இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது” என்றார்.
சீனாவுக்கான ரஷ்ய தூதராக ஆண்ட்ரே டெனிசவ் கடந்த 11-ம் தேதி பதவியேற்றார். அவருக்கு சீன வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி யாங் ஜிச்சி வாழ்த்து கூறினார். அப்போது யாங் கூறும்போது, “சர்வதேச அளவில் ஒழுங்கை நிலைநாட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சீனஅதிபர் ஜி ஜின்பிங்கும் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.