ரஷ்ய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை நடத்த ஒப்புதல்

புதுடில்லி கொரோனா தொற்று நோயை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது இதை இந்தியாவில் பரிசோதனை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .ரஷ்யா உருவாக்கியுள்ள ‛ஸ்புட்னிக்-வி’ தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு(டிசிஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், முதலாவதாக ரஷ்யா மட்டும் கொரோனா வைரசுக்கு ‛ஸ்புட்னிக்-வி’ என்ற மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த மருந்து தற்போது 3ம் கட்டமாக 40 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.இந்த மருந்தை இந்தியாவில் பரிசோதனை செய்யவும், விற்பனை செய்யவும் ரஷ்யாவுடன், இந்தியாவை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 10 கோடி டோஸ் மருந்தை டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு ரஷ்யா வழங்கும்.
‛ஸ்புட்னிக் – வி’ மருந்தாக பதிவு செய்யப்படுவதற்கு முன்னர், ரஷ்யாவில் குறைந்தளவு மக்களிடமே பரிசோதனை செய்திருந்ததால், அதிகளவு மக்கள் தொகை கொண்ட, இந்தியாவில் அந்த மருந்தை பரிசோதனை செய்வது குறித்து டிசிஜிஐ அமைப்பு, டாக்டர் ரெட்டி நிறுவனத்திடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தது.
இந்நிலையில், ‛ஸ்புட்னிக்-வி’ மருந்தை இந்தியாவில் 2 மற்றும் 3 ம் கட்ட பரிசோதனை செய்ய டிசிஜிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாத் கூறுகையில், டிசிஜிஐ அமைப்பின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவோம். அனுமதி கிடைத்துள்ளது, பரிசோதனைக்கான எங்கள் முயற்சியில் கிடைத்துள்ள முன்னேற்றமாகும். கொரோனாவுக்கு எதிரான மருந்தை பாதுகாப்பானதாக கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம் என தெரிவித்தா