ரஷ்ய பாலம் தகர்ப்பு

ரஷிய ராணுவம் தனது நாட்டின் கிழக்கு பகுதி வழியாக உக்ரைனுக்குள் நுழைய, பிலோஹோரிவிகாவில் உள்ள சிவர்ஸ்கை டோனட் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் உக்ரைன் ராணுவம் வான்வெளி தாக்குதல் மூலம் இந்த பாலத்தை உடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் நதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்களும் அழிக்கப்பட்டது. இது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என உக்ரைன் கூறியுள்ளது.
06.50: ரஷியா நிகழ்த்தி உள்ள போர்க்குற்ற விசாரணையை உக்ரைன் நீதிமன்றம் தொடங்கி உள்ள நிலையில், 10,000 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை அடையாளம் கண்டுள்ளதாக உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் உள்பட போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என ரஷியா மறுத்துள்ளது.