ராஃபா எல்லையை திறந்தது எகிப்து: வெளிநாட்டவர்களுக்கு மட்டும் அனுமதி

ராஃபா: நவ.2-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மூன்று வாரங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.இந்தச் சூழலில், ராஃபா எல்லையை எகிப்து நேற்று திறந்தது.
காசாவிலிருந்து ராஃபா வழியே எகிப்துக்குள் வருவதற்கு வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், போரில் தீவிர காயமடைந்த 81 பாலஸ்தீனர் களுக்கும் அனுமதி வழங்கப்பட் டுள்ளதாக காசா எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எகிப்துக்கும் பாலஸ்தீனத்தின் காசாவுக்கும் எல்லைப் பகுதியாக ராஃபா அமைந்துள்ளது.போரிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் காசாவிலிருந்து வெளியேறி எகிப்துக்குள் நுழைய திட்டமிட்ட நிலையில், எகிப்து அரசு ராஃபா எல்லையை மூடியது. அதன் பிறகு, ராஃபா எல்லை வழியாக காசாவுக்குள் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்வ தற்கு மட்டும் எகிப்து அனுமதி வழங்கியது. காசாவிலிருந்து மக்கள் எகிப்துக்குள் நுழைய அனுமதி மறுத்தது. காசாவில் 24 லட்சம் மக்கள் வசித்து வருகிறனர். இவர்களில் 44 நாடுகளைச் சேர்ந்த மக்களும் அடக்கம். ஐநா உட்பட 28 சர்வதேச அமைப்புகள் காசாவில் உள்ளன. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டதையடுத்து, மக்கள் வெளியேறுவதற்காக தற்காலிகமாக ராஃபா எல்லையை எகிப்து திறந்துள்ளது. காசாவில் உள்ள வெளிநாட் டவர்களுக்கும் இரட்டை குடியு ரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே ராஃபா எல்லை வழியாக எகிப்துக் குள் வருவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும், போரில் காய மடைந்த 81 பாலஸ்தீனர்களை சிகிச்சைக்காக எகிப்துக்குள் அழைத்து வருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போரால் காய முற்றவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை அழைத்துச் செல்ல எகிப்து எல்லையில் ஆம்பு லன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.