ராகுலுக்கு பிரதமர் பதவி கார்கே விருப்பம்

புதுடெல்லி, ஜூன்.1-காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: இந்த பொதுத் தேர்தலில் பா.ஜவை தோற்கடிக்கப்பட்டால், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். ராகுல் காந்தி பலரால் பிரதமர் பதவிக்கான யதார்த்தமான ஒருமித்த வேட்பாளராக பார்க்கப்படுகிறார். இருப்பினும் நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். இந்த தேர்தலில் நாங்கள் ஒன்றாக இணைந்து போராடுவது என்று முடிவு செய்து இருக்கிறோம்.
கூட்டணி தலைவர்கள் எடுத்த முடிவு அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு யார் பிரதமர் என்பதை கூட்டாக முடிவு செய்வோம். பிரதமர் பதவிக்கு எனது பெயரை நான் எப்படி முன்மொழிவது? இதுபற்றி கட்சி முடிவு எடுக்கும். கூட்டணிக் கட்சிகள் எனது பெயரை குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால், எங்கள் கட்சியில், நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து முடிவு செய்வோம். 2004 மற்றும் 2009ல் நடந்தது போன்ற தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.