ராகுல் காந்தி காட்டம்

புதுடெல்லி:மார்ச் 16-
உலகில் மிரட்டி பணம் பறிக்கும் மிகப்பெரிய கும்பலை பிரதமர் மோடி வழிநடத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதி, அரசியல் கட்சிகளை பிளவுபடுத்த பயன்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்கவும் தேர்தல் பத்திர நிதியை பாஜக பயன்படுத்தியதாகவும், என்றாவது ஒருநாள் பாஜக அரசு அகற்றப்பட்டு, அவர்களின் பேச்சை கேட்டு செயல்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ராகுல் கூறினார்.