ராகுல் காந்தி, லாலு பிரசாத் இரங்கல்

புதுடெல்லி, ஜன. 13-
முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சியின் தலைவருமான சரத் யாதவ் (75), நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய மந்திரியாக இருந்தார். 2017ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சரத் யாதவ் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சரத் யாதவ் ஜி சோசலிசத்தின் தலைவராக இருப்பதுடன் அடக்கமான இயல்புடையவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.