ராகுல் கோரிக்கை அமலாக்கத்துறை ஏற்பு

புதுடெல்லி, ஜூன். 17 – நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதில் இருந்து மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்றைக்கு ஆஜராகுவதில் இருந்து 3 நாட்கள் அவகாசம் கேட்ட ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த கோரிக்கையை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் சோனியா காந்தியின் உடல் நிலையை கவனித்து வருவதால் ராகுல்காந்தி அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் 4 நாட்கள் ஆஜராக விலக்களிக்க கோரி அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் ஜூன் 20ம் தேதி வரை ஆஜராவதில் இருந்து அமலாக்கத்துறை விலக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.