ராகுல் நாளை தாவணகெரே வருகை

தாவணகரே, ஆக. 2-
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்ராமய்யாவின் 75வது பிறந்தநாள் விழாவை ஒட்டி தாவணக்கரேயில் நாளை நடக்கவுள்ள சித்த ராமோற்சவத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் பங்கேற்கிறார்.
சட்டசபை எதிர்க்கட்சித்தால் சித்தராமய்யாவின் 75வது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் சித்த ராமோற்சவம் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.
இதற்காக தாவணக்கரேயில் உள்ள சாமனூர் சிவசங்கரப்பா அரண்மனை மைதானத்தில் பிரம்மாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சித்தராமையாவுக்கு வரும் 12ஆம் தேதி பிறந்தநாள் என்றாலும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் வருகையால் அவருக்கு ஏற்ப விழாவை நாளை கொண்டாடப்படுகிறது.
இந்த வகையில் இன்று டெல்லியில் இருந்து ஹுப்பள்ளி வரும் ராகுல், கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நாளை காலை 11:00 மணிக்கு நடக்கும் சித்தராமோற்சவ விழாவில் பங்கேற்கிறார். விழாவை ஒட்டி தாவணக்கரே நகர் முழுவதும் வாழ்த்து பேனர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஆறு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. பிறந்தநாள் விழா வாயிலில் தான் தான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளருக்கு தகுதி உடையவர் என்பதை காட்டி க்கொள்ள சித்தராமையா திட்டமிட்டு இருப்பது, இதன் மூலம் தெரிகிறது.