ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ஏப். 16:
தேர்தல் பாத்திரங்கள் மூலம் மிகப்பெரிய கொள்ளையடிக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி தான் மூளையாக செயல்பட்டதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். என்ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்திருக்கும் மோடி தேர்தல் பாத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் நன்கொடை அளித்தது வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றதாகவும், இந்த முறையை ரத்து செய்வதற்கு எதிர்க்கட்சியினர் வருத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.கேரளாவில் தேர்தல் பரப்புரைக்கு இடையே இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி; தேர்தல் பத்திரத்தில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர், தேதிகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பெயர், தேதியை பார்த்தாலே தேர்தல் பத்திரம் வழங்கியவுடன் அவர்களுக்கு ஏதேனும் ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது. அல்லது நன்கொடை வழங்கியவர்கள் மீதான விசாரணையை சிபிஐ திரும்பபெறுவது அம்பலப்பட்டுள்ளது. இங்கேதான் பிரதமர் மோடி சிக்கிக்கொண்டார். தேர்தல் பத்திரம் மூலம்.நன்கொடை பெற்றது, உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம் என குற்றம் சாட்டிய ராகுல், இதற்கு பிரதமர் மோடி மூளையாக செயல்பட்டதாகவும் தெரிவித்தார். தேர்தல் பாத்திரங்கள் மூலம் ஊழல்வாதிகளிடம் இருந்து பணம் பெற்றதை பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாக டெல்லி அமைச்சர் அதிதி கூறியுள்ளார்.அவரது பேட்டியின் அடிப்படையில் பாஜக மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.