ராகுல் மீண்டும் எம்.பி. ஆனார்

புதுடெல்லி, ஆக. 7- அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளதால், அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்தது.இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். மேலும் மக்களவை செயலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை மக்களவை செயலகம் இன்று பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும், பதவி நீக்கம் செய்யும்போது காட்டிய வேகத்தை மத்திய அரசு திரும்ப பெறும் விவகாரத்தில் காட்டவில்லை என்று விமர்சித்தன. இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆகியுள்ளார். இதனால்,நாளை தொடங்க உள்ள மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டு அவர் மீண்டும் எம்பி ஆகி இருப்பதை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இது சர்வாதிகார பிஜேபி ஆட்சிக்கு கிடைத்த பெரும் தோல்வி என்றும் இனி ராகுல் காந்தியின் ராஜாங்கம் வெல்லும் என்றும் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றவுள்ள உரையை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி இன உற்சாகத்துடன் கூறினர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சித் தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்