ராகுல் மீது போலீசில் புகார்: வீர் சவார்க்கர் பேரன் அறிவிப்பு

புதுடெல்லி, நவ.17-
மும்பை: தொடர்ந்து திட்டமிட்டே சுதந்திர போராட்ட வீரர் வீர் சவர்கரை அவமதிப்பதாக கூறி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்போவதாக மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் வி.டி.சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் கூறியுள்ளார். பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல் காந்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹிங்கோலியில் பழங்குடியின மக்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அந்தமான் சிறையில் இருக்கும் போது வீர சாவர்க்கார் ஒரு கடிதம் எழுதினார். அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம். அந்த கடிதத்தில் அவர் தன்னை விடுவிக்குமாறு மன்றாடியிருந்தார்.. இதேபோல் வீர் சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பென்ஷன் பெற்றார். சிறையில் இருந்து வந்த பின்னர் அவர் பிரிட்டிஷ் படைகளில் சேர்ந்தார். வீர் சாவர்கருக்கும், பிர்ஸா முண்டாவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்றார். இந்த நிலையில், தொடர்ந்து திட்டமிட்டே சுதந்திர போராட்ட வீரர் வீர் சவர்கரை அவமதிப்பதாக கூறி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்போவதாக மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் வி.டி.சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து என் தாத்தாவை அவமதித்து பேசி வருகிறார். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி வீர் சாவர்க்கரை அவமதித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

https://www.dailythanthi.com/News/India/veer-savarkars-grandson-to-file-case-against-rahul-gandhi-for-insulting-freedom-fighter-838740