ராக்லைன் மாலிற்கு பூட்டு: பிபிஎம்பி அதிகாரிகள் நடவடிக்கை

பெங்களூரு, பிப். 14: டி.தாசரஹள்ளி மண்டலத்திற்குட்பட்ட ராக்லைன் மால், நிலுவைத் தொகை செலுத்தாததால், இன்று மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் ராக்லைன் மாலிற்கு பூட்டு போட்டுள்ளனர். மாலை அதனை ஜப்தி செய்ய உள்ளனர்.
2011 முதல் 2022-23 வரை ராக் லைன் மாலில் இருந்து 11.51 கோடி நிலுவையில் உள்ளது. மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வரியை செலுத்துவதற்கான கோரிக்கை அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது ஆனால் வரி செலுத்தப்படவில்லை.
தாசரஹள்ளி மண்டல உயர் அதிகாரிகள் தலைமையில் இன்று ராக்லைன் மாலிற்கு பூட்டு போட்டனர்.
மாலை அதனை செய்ய உள்ளனர்.
மண்டல ஆணையர் ப்ரீத்தி கெலாட், மண்டல இணை ஆணையர் பாலசேகர், தாசரஹள்ளி மண்டல அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறை ஊழியர்கள், மார்ஷல்கள் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்தனர்.