ராஜராஜேஸ்வரி நகர் ராமப்பன ஏரியியை தூர் வார வற்புறுத்தல்

Oplus_131072

பெங்களூர் : மே 31 -பெங்களுர் தெற்கு பகுதியின் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள புனுகுமாரனஹள்ளியின் ராமப்பா ஏரியில் வெய்யில் காலத்திலும் இதற்கு முன்னர் தண்ணீர் சுரந்து வந்தது. இதனால் சுற்றுப்பகுதிகளில் நிலைத்தடி நீர் மட்டமும் உயர்ந்திருந்தது. தண்ணீர் நிறைந்திருந்த இந்த ஏரியில் ஒரு பக்கம் குப்பைகள் கழிவுகள் மணல் , மற்றும் கற்கள் நிறைந்துள்ளன. இதில் அருகில் உள்ள பூ வளர்ப்பு தோட்டத்தின் தேவையற்ற மணலையும் ஏரியில்கொட்டி விடுவதாக பொது மக்கள் தெரிவித்தனர்.ராமப்பா ஏரிக்கு புனுகுமாரனஹள்ளி , கணபதிஹள்ளி , பசப்பான ஹள்ளி , கேதோஹள்ளி , ஆகிய பகுதிகளிலிருந்து கால்வாய்கள் வாயிலாக மழை நீர் வந்து சேர்கிறது. இதனால் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் நிரம்பியிருந்த ஏரியில் இன்னும் தண்ணீர் உள்ளது. ஆனால் சமீபத்தில் ஏரியின் சுற்றுப்பகுதிகளில் கழிவு தண்ணீர் வந்து சேர்வதால் இதனால் ஏரி தண்ணீர் கலப்படமாகியுள்ளது. இதனால் சுற்றசூழலும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நான்கு வருடங்களுக்கு முன்னரும் இந்த ஏரியில் இப்படித்தான் கழிவு நீர் நிரம்பி ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாய்களும் அடைத்து போயின . மழை வரும்போது ஏரிக்கு வந்து கொண்டிருந்த சிறிதளவு நீரும் டிசம்பர் மாதத்தில் வற்றி விடும். ஏரியின் நிலைமையை கவனித்த யுத்த பூமி போராட்ட படை மாநில பிரிவின் தலைவர்ஹேமந்த் ராஜ் 2019ல் ஏரியை தூய்மைப்படுத்த முற்பட்டார். வருவாய் துறை அனுமதியுடன் பணத்தில் ஜேசிபி , மற்றும் டிராக்டர்களை பயன்படுத்தி ஏரியை தூர் வாரினார். நீர் கால்வாய்களின் அடைப்புகளை அகற்றி மழை நீர் எளிதாய் ஏரிக்குள் வரும்வகையில் வசதிகள் செய்தார். 2020ல் நல்ல மழை பெய்து ஏரி நிரம்பியது. பின்னர் வருவாய்த்துறை ஏரியை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைத்தது. ஆனால் இப்போது மீண்டும் ஏரிக்கு கழிவு தண்ணீர் வந்து சேர்வதுடன் ஏரியின் சுற்றுப்பகுதியில் போட்டிருந்த வேலியும் ஆங்காங்கு அறுந்து விழுந்துள்ளன. சம்மந்தப்பட்ட துறையினர் இதனை சீர்படுத்தவேண்டும் என இப்பகுதி மக்கள் வற்புறுத்துகின்றனர்.ராமப்பன ஏரி ராமோஹள்ளி ஏரிகளில் வெய்யில் காலத்திலும்தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருந்ததால் சுற்று பகுதியில் இருந்த போர்வெல் களில் நல்ல தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்க வில்லை. விவசாய நடவடிக்கைகளுக்கும் மிகவும் உதவியாக இருந்தது. எனவே இப்போது இந்த ஏரியை சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என புனுகுமாரனஹள்ளி மக்கள் தெரிவித்துள்ளனர்.