ராஜஸ்தான் விவசாயிகளுக்கு 12000 ரூபாய் – பிரதமர் அறிவிப்பு

ராஜஸ்தான் நவம்பர். 21 – ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களையும், சமூகத்திற்கு ஏதாவது வாக்குறுதி கொடுத்து மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக மாற்றி வெற்றி பெற வேண்டும் என்ற முக்கிய இழக்குடன் பாஜக கட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி முதல் பல முக்கிய தலைவர்கள் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய துவங்கியுள்ளனர்.
என அக்கட்சி ஏற்கனவே உறுதியளித்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மாநில பாஜக அரசு, பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றொரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.தற்போது ​பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வரும் வேளையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மாநில பாஜக அரசு இத்தொகையை இரட்டிப்பு செய்யும் வகையில் 12000 அளிக்கும் என பிரதமர் கூறியுள்ளார்.