
புதுடெல்லி, ஆக . 2- பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவாரும் கலந்து கொண்டார். Powered By PauseUnmute Loaded: 1.63% Fullscreen அப்போது பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில் ‘’ராஜீவ் காந்தி மிஸ்டர் க்ளீன் எனறு அழைக்கப்பட்டார். பிரதமர் மோடியும் அதே நற்பெயரை பெற்றுள்ளார். பிரதமர் மோடியுடன் அணிவகுத்து சென்ற வாகனத்தில் நானும், தேவேந்திர பட்னாவிஸும் ஒரே காரில் சென்றோம். அப்போது கருப்புக்கொடி ஏந்தி யாரும் போராட்டம் நடத்தியதை பார்க்கவில்லை. சாலைகளின் இரு புறங்களிலும் பொதுமக்கள் நினறு பிரதமர் மோடியை வரவேற்றனர். சட்டம்-ஒழுங்கு பார்வையில் இருந்து எந்தவொரு பிரதம மந்திரியாக இருந்தாலும் சிறந்த சூழ்நிலை நிலவ வேண்டும் என நினைப்பார்கள். மணிப்பூரில் நிகழ்ந்ததற்கு யாரும் ஆதரவு அளிக்கமாட்டார்கள். இந்த விவகாரத்தை பிரதமர் மோடி கவனத்தில் எடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியும் கவனத்தில் எடுத்துள்ளார். அங்கு நடந்ததை அனைவரும் கண்டித்துள்ளனர். தீபாவளி பண்டிகையின்போது, மக்கள் வீட்டில் கொண்டாட்டத்தில் இருக்கும்போது, அவர் நாட்டின் எல்லையில் வீரர்களுடன் கொண்டாடினார். கடந்த 9 வருடங்களாக நான் அவரது பணியை பார்த்துக்கொண்டு வருகிறேன். சர்வதேச அளவில் அவரைப் போன்ற எந்த தலைவரும் புகழ்பெற்றது கிடையாது. இது உண்மையிலும் உண்மை. நான் வளர்ச்சியை விரும்புகிறேன். எதிர்க்கட்சிகள் போராட்டம், பேரணிகளை நடத்தலாம். ஆனால் முடிவு அதிகாரத்தில் உள்ளது’’ என்றார்.