ராஜீவ் நினைவிடத்தில் சோனியா ராகுல் கார்கே மலர் தூவி மரியாதை

புதுடெல்லி, மே 21: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மல்லிகார்ஜுன கார்கே, சோனியா மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ‘வீரபூமி’யில் உள்ள ராஜீவ் காந்தி சமாதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல்காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சச்சின் பைலட், ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் இதில் கலந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியும் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எனது வணக்கங்கள் என்று மோடி தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
1991 ஆம் ஆண்டு 21 மே ஆம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி. தற்கொலை குண்டு வைத்திருந்த‌வரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இதில் கொலையாளிகளுடன் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 21-ம் தேதியை தீவிரவாத எதிர்ப்பு தினமாக வி.பி.சிங் தலைமையிலான‌ அரசு அறிவித்தது. தற்போது இந்த நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பதாக உறுதிமொழி எடுக்கின்றன.ஹெலிகாப்டர் விபத்து: கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மோசமான வானிலை காரணமாக, விபத்து நடந்த இடத்தை அடைய தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் சிரமப்பட்டனர். இறுதியாக திங்கள்கிழமை காலை விபத்து நடந்த இடத்தை அடைய முடிந்தது. இந்த விபத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்தார்.